பட்ஜெட் 2025 இன்னும் 22 நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தங்கம், தங்க நகைகள் மற்றும் ரத்தினங்களின் மீது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதனை 1 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தங்கத் தொழில்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறைந்து, மக்கள் தங்கத்தை வாங்க ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
இந்த கோரிக்கை அனைத்து இந்தியா செம் மற்றும் ஜுவெல்லரி டொமேஸ்டிக் கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோகடே முன்வைத்துள்ளார். அவர் கூறினபடி, அரசு தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தால் வணிக வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு அளிக்கும். மேலும், தங்கத்தின் விலையின் தொடர்ந்த உயர்வு காரணமாக, தற்போது நிலவும் ஜிஎஸ்டி வாக நகைத் தொழிலுக்கே பெரும் சுமையாக இருக்கின்றது.
இந்த வரி குறைப்பின் மூலம், நகைத் தொழிலுக்கு கடன்கள் எளிதாகக் கிடைக்கும் என்றும், கிராமப்புற மக்களின் சேமிப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





