உத்தரகாண்டில் மழை குறைந்தது சார்தாம் யாத்திரை மீண்டும் தொடக்கம்
- 4 hrs ago
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் வழக்குகள் முடிவடைந்த பின்னர் இடைத்தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் ஆணையம் விளக்கம் அளித்தது. இதற்கிடையில், இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பாதுகாப்புத் துறை அரங்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏவுகணை மாதிரிகள், மேம்பட்ட ட்ரோன்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐஐடி கான்பூரின் ஆதரவுடன் மாரால் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய சூரிய சக்தியில் இயங்கும் தேஜஸ்வான் ட்ரோனும் கவனம் பெற்றுள்ளது. இந்த ட்ரோன் ஐந்து கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து சுமார் 300 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடியதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்ப சூழலை இந்த அரங்கம் வெளிப்படுத்துகிறது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காரைக்கால் அரசலாற்றில் படகுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடத்திய இப்போட்டியில் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அரசலாற்றுப் பாலம் முதல் கடற்கரைக்கு அருகிலுள்ள படகுக் குழாம் வரை சுமார் 800 மீட்டர் தொலைவுக்கு போட்டி நடைபெற்றது. துடுப்புகளை வேகமாக இயக்கிய மீனவர்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். காளிக்குப்பம் அணி முதலிடத்தையும், மண்டபத்தூர் அணி இரண்டாம் இடத்தையும், கீழகாசாக்குடிமேடு அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சார்பு ஆட்சியர் எம். பூஜா பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகுதியில் நெல் கொள்முதல் கிடங்கு இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வெட்டவெளியில் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளால் நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வாணாபுரம் பகண்டை கூட்டுச்சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கிடங்கு அமைக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நிரந்தர கட்டிடம் அமைக்கப்படவில்லை. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் கிடங்கை விரைவாக அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.