2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 5 முக்கியமான திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பலனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்களாக இருக்கும்.
இந்த முக்கிய திட்டங்கள் மற்றும் அவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் கூடுதல் நிதி தொடர்பாக விரிவான விவரங்களை எடுத்து பார்ப்போம். 2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், மக்கள் பயன்பாடு அடிப்படையில் பல முக்கிய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், நாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய மைல் கற்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





