°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வி துறை ரத்து
Education Updates

பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வி துறை ரத்து

1.0 views
Text Size:

இந்த புதிய விதிமுறைகள் கேந்திரிய வித்யாலயா , நவோதயா வித்யாலயா , மற்றும் சைனிக் பள்ளிகள் உள்பட மத்திய அரசு பள்ளிகளுக்கு பொருந்தும்.

மத்திய கல்வி துறை 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்துள்ளது. இந்த மாற்றத்தை கல்வி செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்தார். 2019-ல் கல்வி உரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த தேர்ச்சி முறையை அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்படி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தேர்ச்சி கொள்கை மாற்றப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் படி, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள், ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் தொடர்வார்கள். மேலும், தேர்ச்சி பெறாத மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்ற கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மற்றும் சைனிக் பள்ளிகள் உள்பட மத்திய அரசு பள்ளிகளுக்கு பொருந்தும். மேலும், இந்த சட்டத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது நிலைமைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. தற்போது, இந்த திட்டத்தை 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.

ஹரியானா மற்றும் புதுச்சேரி ஆகிய அரசுகள் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

ஹரியானா மற்றும் புதுச்சேரி ஆகிய அரசுகள் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது.