கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ்குமார், 1974 இல் ஸ்ரீனிவாச கல்யாண படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பிறகு, 125 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்தின் மூலம் அதிகமாக பிரபலமான இவர், சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பெற்ற அமெரிக்காவில் உள்ள மியாமி புற்றுநோய் மையத்தில் (MCI) அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்த பித்தப்பை அகற்றப்பட்டது. அதன் பின்பு, சிவராஜ்குமார் தனது மீட்பு பயணத்தை ஒரு உருக்கமான இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், "நான் முன்பு மிகவும் பயந்தேன், ஆனால் எனது ரசிகர்கள், உறவினர்கள், சக கலைஞர்கள் மற்றும் மருத்தவர்கள் - குறிப்பாக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷஷிதர் என்னை வலிமையாக்கினார்," என்று அவர் கூறினார். மேலும், சிகிச்சையின் போது தனக்கு துணையாக நின்ற மனைவி கீதா மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "என் மனைவி கீதா என்னை மிகவும் கவனித்துக் கொண்டார். மியாமி புற்றுநோய் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் முழு ஊழியரும் என்னை ஆதரித்தனர்," என்று கூறியுள்ளார்.
சிவராஜ்குமாரின் இந்த மீட்பு பயணம் அவரது ரசிகர்களுக்கு முக்கியமான ஊக்கமாக அமைந்துள்ளது. அவரின் நன்றி உரையும், சிக்கலான தருணங்களில் ஆதரவு கிடைக்கும் முக்கியத்துவத்தையும் பிரதிபலித்துள்ளது.


