பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, இப்படத்தில் 'மலர் டீச்சர்' கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பெயர் பெற்ற அவர், தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். தற்போது, நாக சைதன்யாவுடன் தண்டேல் மற்றும் பாலிவுட்டில் ராமாயணம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவியின் அடுத்த படத்திற்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் வெணு யெல்டாண்டி இயக்கும் எல்லம்மா படத்தில் நித்தின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்போவதாகவும், இப்படத்தின் வெளியீடு பற்றிய திட்டங்கள் தற்போது தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் பல்லவியின் ரசிகர்கள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கும் நிலையில், அவரது அடுத்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.





