இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஷ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, இந்த படத்திற்கும் இசை வழங்கியுள்ளார்.
சென்னையில் காசி திரையரங்கில் படத்தை பார்ப்பதற்காக வந்த வெற்றிமாறன், "ரசிகர்கள் எப்படி படம் பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வந்தேன். படம் முடிந்த பிறகு வரவேற்பு எப்படி இருக்குமோ, ரசிகர்கள் என்ன சொல்கிறார்களோ என்று காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
மேலும், செய்தியாளர்கள் அவரிடம் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசிய சர்ச்சையைப் பற்றி கேட்கப்பட்ட போது, வெற்றிமாறன் தனது கருத்தை வெளிப்படுத்தி, "அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை, அரசமைப்பு சட்டம் பற்றிய விவாதத்தின் போது, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடும் விதத்தில், அவர் மீது இழிவுப் பேச்சை வெளியிட்டதாக பரபரப்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன.





