தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநராக புகழ்பெற்ற கே.எஸ். ரவிக்குமார், 90களில் பல ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர். "புரியாத புதிர்" படத்துடன் துவங்கி, "நாட்டாமை", "முத்து", "பிஸ்தா", "வில்லன்", "தசாவதாரம்" என பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், கே.எஸ். ரவிக்குமாரின் தாயார், 88 வயதான ருக்மணி அம்மாள், வயது மூப்பினால் காலமானார். ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.





