"லவ் டுடே" படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படமாக "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (எல்.ஐ.கே) எனும் படத்தில் நடிக்கிறார். இதனை தமிழ் சினிமாவில் "போடா போடி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரதீப்பின் தந்தை வேடத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார்.
இப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக உருவாகியுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்போது படம் பின்னணி பணிகளை நெருங்கி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் காட்சி மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு வைரலாகி ரசிகர்களிடையே பரவலான கவனத்தை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், இப்படம் மே 16-ம் தேதி வெளியீடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





