ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், 1985 ஆம் ஆண்டு முதல் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வந்த ஒரு பிரபலமான தயாரிப்பு நிறுவனம். இதில், விஜய் நடிப்பில் 'மெர்சல்' திரைப்படம் மிகுந்த வெற்றியை பெற்றது. அதன்பின்னர், 2023-ல் வெளியான 'வல்லவனுக்கும் வல்லவன்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. தற்போது, இந்த நிறுவனம் தனது 101-வது படமான 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' ஐ தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிக் பாஸ் புகழ்பெற்ற லாஸ்லியா கதாநாயகியாக நடித்து, ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஹேமா ருக்மணி தயாரித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படம், 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.





