இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரு. மாணிக்கம் படம், ஜீ5 தமிழ் ஓ.டி.டி தளத்தில் வரும் ஜனவரி 24-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார், பாடல்களை சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளனர்.
திரைப்படம் கேரளாவில் குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ள இப்படம், தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் முன்பு, கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், தற்போது அதிரடி காட்சிகளுடன் ஓ.டி.டி தளத்தில் ரசிகர்களுக்குக் கிடைக்கும்.





