விஜயின் ஜில்லா மற்றும் வேலாயுதம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.பாலா, தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் முகேன் ராவை வைத்து ஜின் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், ஜோ பட புகழ் பவ்யா திரிகா கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர்களாக பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தில் தனது கதாபாத்திரமான பிரியாவைப் பற்றி பவ்யா திரிகா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். "இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் பிரியா, அது என்னை அப்படியே பிரதிபலிக்கிறது. பிரியா ஒரு இனிமையான, அக்கறையுள்ள பெண். நானும் அப்படித்தான். பிரியா என்பது ஒரு பொதுவான பெயராக இருக்கலாம், ஆனால் எனது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும்" என்றார்.
ஜின் படம் புதிய கதையும், புதிய முகங்களையும் கொண்ட ஒரு படமாக உருவாகி வருகிறது, இதில் பவ்யா திரிகாவின் கதாபாத்திரம் முக்கியமான ஒரு இடத்தில் உள்ளது.





