°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
'ரெட்ரோ' படத்தின் முதல் பாடல் பற்றிய புதிய தகவல்!
TAMIL

'ரெட்ரோ' படத்தின் முதல் பாடல் பற்றிய புதிய தகவல்!

0.0 views
Text Size:

சூர்யாவின் 44-வது படம் 'ரெட்ரோ', கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம், சூர்யாவின் 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்களின் கூட்டுப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்.

சூர்யாவின் 44-வது படம் 'ரெட்ரோ', கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம், சூர்யாவின் 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்களின் கூட்டுப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார், மேலும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படப்பிடிப்பு முடிந்து, தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு வைரலானது. ஆக்சன் கலந்த காதல் கதை கொண்ட இப்படம் மே 1-ந்தேதி, தொழிலாளர் தினம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில், பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14-ந் தேதி, காதலர் தினம் அன்று பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சன் கலந்த காதல் கதை கொண்ட இப்படம் மே 1-ந்தேதி, தொழிலாளர் தினம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.