தமிழ் சினிமா ஒவ்வொரு வாரமும் பல படங்களை திரையரங்குகளில் வெளியிடுகிறது. நாளை வெளியாகவுள்ள முக்கிய படங்களுக்கான விவரங்கள் இதோ:
விடுதலை 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் விடுதலை 2. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், மூணார் ரமேஷ், பவானீஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மார்கோ: மாலையாளி சினிமாவின் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ திரைப்படம், ஹனீப் அடேனி இயக்கத்தில் ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
முபாசா: தி லயன் கிங்: லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளதானது. இப்பதம் காட்டு விலங்களின் உறவுகள், வெறுப்பு, காதல் மற்றும் தலைமை போன்ற குணாதிசயங்களை விவரிக்கின்றது. இத்திரைப்படம் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
ரைபிள் கிளப்: இயக்குனர் ஆஷிக் அபு இயக்கிய ரைபிள் கிளப் படத்தில் அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் திலீஷ் போத்தன், தர்ஷனா ராஜேந்திரன், வாணி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓபிஎம் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
யு.ஐ: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் உபேந்திரா நடித்து இயக்கிய யு.ஐ படம் ஒரு அறிவியல் பிக்சன் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.





