°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
"ரெட்ரோ" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.
TAMIL

"ரெட்ரோ" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.

0.0 views
Text Size:

இந்த படத்தை சூர்யாவின் 2டி இன்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

நடிகர் சூர்யாவின் 44-வது படமான ரெட்ரோ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி இன்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரெட்ரோ என்பது பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படமாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது, அதன்படி இந்த படத்திற்கு ரெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.


புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரொன்று தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி பரவிவருகிறது.

நடிகர் சூர்யாவின் 44-வது படமான ரெட்ரோ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

"ரெட்ரோ" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.