பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் பிறகு அவர் லவ் டுடே படத்தினை இயக்கி கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படங்களில் நடித்து வருகிறார். டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார், மற்றும் இப்படத்தின் நட்சத்திரங்களாக மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், கே.எஸ். ரவிகுமார், ஜார்ஜ் மரியன், இந்துமதி, விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் காதலர் தினத்தன்று வெளியாவதாக கூறப்படுகிறது. படத்தின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.





