°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில்  உருவாகும் புதிய படத்தின் புரோமோ வெளியீடு.
Tamil

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் புரோமோ வெளியீடு.

0.0 views
Text Size:

இந்நிலையில், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிய லோகேஷ், தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் புதிய படம் மிஸ்டர் பாரத் உருவாக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற பிரபலமான திரைப்படங்களின் இயக்குனராக தனது தனித்துவமான தடம் பதித்து உள்ளார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 171-வது படம் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், கைதி 2 மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்களையும் இயக்க உள்ளார்.


இந்நிலையில், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிய லோகேஷ், தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் புதிய படம் மிஸ்டர் பாரத் உருவாக்கி வருகிறார். இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இயக்குனர் நிரஞ்சன் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்தப் புதிய படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை லோகேஷ் தனது சமூக ஊடகங்களில் ஒரு புரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளார், இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற பிரபலமான திரைப்படங்களின் இயக்குனராக தனது தனித்துவமான தடம் பதித்து உள்ளார்.