°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் லுக் வெளியீடு.
TAMIL

சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் லுக் வெளியீடு.

0.0 views
Text Size:

இப்படம் வரும் மே மாதம் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கத் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சந்தானம், தனது நடிப்பில் பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


தற்போது சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க, ஆர்யா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். சந்தானத்துடன் கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, விறுவிறுப்பாக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


இதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் வரும் மே மாதம் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கத் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் லுக் வெளியீடு.