2021ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம், இயக்குனர் வெங்கட் பிரபுவின் கையேட்டில் உருவானது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர். 'டைம் லூப்' கதையம்சத்தை கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றது. படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றது.
இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனைபடைத்தது. தற்போது, சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் மாநாடு திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் அதிகமாக உற்சாகமாக இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே, ரசிகர்களின் ஆதரவுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.





