தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, இன்று மிகப்பிரபலமான நடிகராக வளர்்ந்துள்ளார். 1984-ம் ஆண்டு 'உறவை காத்த கிளி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக களமிறங்கியுள்ளார்.
சிம்பு தற்போது கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகிய 'தக் லைப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அடுத்ததாக, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், அவர் தனது பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி 'மன்மதன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் வெளியான இப்படம், மக்களுக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம், 21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாக திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிப்பு, சிம்பு மற்றும் 'மன்மதன்' ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





