°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
நடிகர் சயிப் அலிகானின் வீடு மீது கத்திக்குத்து தாக்குதல்: போலீசாரின் விசாரணை.
TAMIL

நடிகர் சயிப் அலிகானின் வீடு மீது கத்திக்குத்து தாக்குதல்: போலீசாரின் விசாரணை.

0.0 views
Text Size:

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது இன்று அதிகாலை மும்பை பந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினான்.

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது இன்று அதிகாலை மும்பை பந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினான். அந்த நபர், வீட்டில் உள்ள பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் சயிப் அலிகானை கத்தியால் தாக்கி தப்பி ஓடிவிட்டார்.


சயிப் அலிகான் படுகாயமடைந்து, உடனடியாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தலைவர், "சயிப் அலிகான் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவர் ஆறு இடங்களில் காயமடைந்துள்ளார், இதில் இரண்டு ஆழமான காயங்களாக உள்ளன. ஒன்றை முதுகெலும்பின் அருகில் உள்ளது. அவர் தற்போது அறுவை சிகிச்சை பெற்று வருகிறார்" என்று தெரிவித்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்மநபரை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சினிமா உலகையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மருத்துவமனை தலைவர், "சயிப் அலிகான் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார்.