°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
Surya 44: சூர்யாவின் படத்தில் குத்தாட்டத்துடன் ரசிகர்களை கவரும் பிரபல நடிகை!
TAMIL

Surya 44: சூர்யாவின் படத்தில் குத்தாட்டத்துடன் ரசிகர்களை கவரும் பிரபல நடிகை!

0.0 views
Text Size:

நடிகை ஸ்ரேயா தனது பேட்டியில், "இந்தப் படத்திற்காக ஒரு அழகான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளேன், இது ரசிகர்களுக்குப் பிடிக்கும்" என உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யாவின் கங்குவா படத்துக்குப் பிறகு வெளியான படத்தின் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், படத்திற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அந்தமான், ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஸ்ரேயா ஒரு சிறப்பு பாடலுக்காக நடனம் ஆடியுள்ளதாக கூறி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நடிகை ஸ்ரேயா தனது பேட்டியில், "இந்தப் படத்திற்காக ஒரு அழகான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளேன், இது ரசிகர்களுக்குப் பிடிக்கும்" என உறுதிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள், சூர்யாவின் இந்த புதிய படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்வதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஸ்ரேயா ஒரு சிறப்பு பாடலுக்காக நடனம் ஆடியுள்ளதாக கூறி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Surya 44: சூர்யாவின் படத்தில் குத்தாட்டத்துடன் ரசிகர்களை கவரும் பிரபல நடிகை!