மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-வது ஆண்டு பொன்விழா, இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னையின் அண்ணாமலைபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நடிகர் சத்யராஜுக்கு 'கலைஞர் விருது' வழங்கி அவரை கவுரவித்தார்.
முதல்வர் ஸ்டாலின், இந்த விருது, திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர், திராவிட இயக்கத்தை தமிழுக்கு அரண் என கூறிய சத்யராஜிற்கு வழங்கப்படுகிறது என்று கூறினார். சத்யராஜ், கலைஞர் கருணாநிதி அவருடைய நடிகர் வாழ்க்கையை வடிவமைத்தவர் என்று குறிப்பிட்டார். கலைஞர் விருதை பெற்ற சத்யராஜ் கூறியதாவது, "இதற்கு முன் வில்லனாக நடித்தும், கதாநாயகனாக நடித்தும் பல விருதுகளை கலைஞர் கைகளால் வாங்கியுள்ளேன். ஆனால் அவர் பெயரில் வாங்கும் இந்த விருது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது என்றார். இந்த விருதை எனக்கு வழங்கிய தளபதி ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறியுள்ளார்.





