பிரதர் படத்தின் வெற்றிக்கு பிறகு, ஜெயம்ரவியின் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான காதலிக்க நேரமில்லை பொங்கல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்கியிருப்பவர், "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி.
இப்படத்தில் ஜெயம்ரவியின்பிறகு, நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் வெளியான நிலையில், அதில் 3-வது பாடல் பிரேக் அப் டா சமீபத்தில் வைரலாகி பெரும் பிரபலத்தை பெற்றுள்ளது.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் முழு பாடல்களும் அடங்கிய ஜக் பாக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகி ரசிகர்களின் அசாதாரணமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகி, பல்வேறு ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





