"காதல் என்பது பொதுவுடைமை" திரைப்படம், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சமகால காதலையும், தன்பாலின உறவுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், நீண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருந்தது. தற்போது, பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று, திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெய் பீம்' புகழ் லிஜோ மோல் ஜோஸ் இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். தயாரிப்பில் மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. மேலும், பிரபல மலையாள இயக்குநர் ஜியோ பேபி இப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்ற இப்படம், பாராட்டைப் பெற்றுள்ளது. சமீபத்தில் தணிக்கை குழுவின் 'யு/ஏ' சான்றிதழ் பெற்ற இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது.





