தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமாக உள்ள சமுத்திரக்கனி தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. 'திரு. மாணிக்கம்' மற்றும் 'ராஜாகிளி' என்ற இரண்டு படங்களில் சமுத்திரக்கனி நடிப்பதோடு, முக்கிய கதாபாத்திரங்களில் வலம் வந்துள்ளார்.
'திரு. மாணிக்கம்' - இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் அனன்யா ஜோடியாக நடித்துள்ள குடும்ப கதைக்கள படம். இதில், இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். குடும்பம் மற்றும் இதர மனித உறவுகளை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'ராஜாகிளி' - இந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்தை அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு 50 வயதிற்கு மேற்பட்ட தொழிலதிபர் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படமும் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
இரண்டு படங்களும் சமுத்திரக்கனியின் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெற்றிகரமாக வெளியிடப்படும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.





