"கட்டப்பாவை காணோம்" படத்தின் இயக்குநர் மணி செய்யோன் இயக்கியுள்ள "வல்லான்" திரைப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சுந்தர் சி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து, ஒரு கொலைக்கான காரணத்தை வித்தியாசமான கோணங்களில் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
இத்திரைப்படத்தில் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பில் வி.ஆர். மணிகண்டராமன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
2023-ம் ஆண்டில் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் தாமதமான நிலையில், தற்போது ஜனவரி 24-ஆம் தேதி வெளியீடுக்கு தயாராகியுள்ளது. சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய "மதகஜராஜா" படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான "வல்லான்" திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்து, படத்தின் மீது எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.





