°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
சென்னை மலர் கண்காட்சி 2025: செம்மொழி பூங்காவில் வண்ணமயமான மலர்  காட்சிகள்
Tamil Nadu

சென்னை மலர் கண்காட்சி 2025: செம்மொழி பூங்காவில் வண்ணமயமான மலர் காட்சிகள்

0.0 views
Text Size:

குழந்தைகளுக்கு பிடித்த பல வடிவங்களான பட்டாம்பூச்சி, படகு, மயில், கார், பறவை, யானை, ஊட்டி மலை ரயில் மற்றும் பொம்மைகள் போன்ற வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

சென்னை மலர் கண்காட்சி 2025, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையின் தலைமைத்துவத்தில் செம்மொழி பூங்காவில் 2.01.2025 அன்று தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் 12 லட்சம் மலர்கள் பூங்கா முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டு, கண்களுக்கு விருத்தளிக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. இதனை பார்வையிடுவதற்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் 2024ம் ஆண்டில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டும் அதிகமான பார்வையாளர்கள் கண்காட்சியைக் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


குழந்தைகளுக்கு பிடித்த பல வடிவங்களான பட்டாம்பூச்சி, படகு, மயில், கார், பறவை, யானை, ஊட்டி மலை ரயில் மற்றும் பொம்மைகள் போன்ற வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இவை கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத்துறையினரால் வளர்க்கப்பட்டவை.


சென்னை போன்ற இடத்தில் மலர் கண்காட்சியை நடத்துவது சவாலாக இருந்தது, ஆனால் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை இதனை வெற்றிகரமாக நடத்தி உலகளவில் உள்ள பயணிகளை  வழிவகுத்துள்ளது. பூங்காவில் உள்ள அனைத்து மலர்களும் தோட்டக்கலைத்துறையினரால் வடிவமைக்கப்பட்டு, இடைவிடாமல் தண்ணீரினால் செரிவாய்க்கப்பட்டு இருந்தது.


இந்த கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பார்க்க முடியும். பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேமரா மற்றும் வாகனங்களுக்கு கூட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை போன்ற இடத்தில் மலர் கண்காட்சியை நடத்துவது சவாலாக இருந்தது, ஆனால் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை இதனை வெற்றிகரமாக நடத்தி உலகளவில் உள்ள பயணிகளை வழிவகுத்துள்ளது.