கடலூர்: கடலோர மாவட்டங்களில் தீவிரமாக பாதித்த ஃபெஞ்சல் புயலின் பின்விளைவுகளை எதிர்கொண்டு, நடிகர் KPY பாலா தொடர்ந்து மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார். இந்த புயல் தமிழகத்தின் கடலோர பகுதிகளை கடுமையாக பாதித்தது. 30-ம் தேதி வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், மரக்காணம் அருகே கரையை கடந்தது.
அந்தந்த பகுதியில் மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய KPY பாலா, தன்னால் முடிந்ததை செய்யவேண்டியதாக கூறினார். அவரின் எளிமையான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு எளிதில் பழகும் குணம், சமூகத்தில் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக கடலோர மாவட்டங்கள் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புகளுக்குள்ளாகின்றன. கடந்த ஆண்டு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன, இவ்வாண்டு வட தமிழக மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.





