தர்மபுரி நகரின் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தீபாவளி முதல் பொங்கல் பண்டிகை வரை ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இந்த சம்பவத்தில், சிறப்பு பரிசுக்கான குலுக்கல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி தங்கம் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பரிசு கூப்பன்கள் குலுக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் மூலம், பென்னாகரத்தைச் சேர்ந்த திருமதி பிரியங்கா சக்திவேல் முதல் பரிசாக கார் வென்றார். மேலும், இரண்டாவது பரிசாக மோட்டார் சைக்கிள், மூன்றாவது பரிசாக பிரிட்ஜ், நான்காவது பரிசாக எல்.இ.டி. டி.வி., ஐந்தாவது பரிசாக சோபா உள்ளிட்ட பரிசுகளுக்கான அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பரிசுகளை தமிழ்நாடு அரசு நகராட்சிகள் இணை ஆணையாளர் அசோகன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, ஆசிரியர் முத்துராஜ், வழக்கறிஞர் சிவராஜ், தி.மு.க. மாவட்டத் துணை செயலாளர் ரேணுகாதேவி ஆகிய முக்கிய பிரமுகர்கள் வழங்கினர்.
இந் நிகழ்ச்சியை பட்டிமன்ற பேச்சாளர் ஆசிரியர் சௌந்தர் பாண்டியன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.





