°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
தருமபுரி கூட்டுறவு வங்கியில் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி
Tamilnadu

தருமபுரி கூட்டுறவு வங்கியில் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி

0.0 views
Text Size:

இதில் டாக்டர் அரவிந்த் குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா முன்னிட்டு தருமபுரி நகர கூட்டுறவு வங்கியில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், முப்பெரும் பரிசோதனைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டது. மேலும், உடல் பரிசோதனைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இதில் டாக்டர் அரவிந்த் குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்த முகாமில் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர், மலர்விழி கூட்டுறவு நகர வங்கியின் துணை பதிவாளர் பிரேம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அன்பழகன், நகர கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அலுவலர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்த நிகழ்வு மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதோடு, கூட்டுறவுத்துறை சேவையின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

இந்த முகாமில் கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தருமபுரி கூட்டுறவு வங்கியில் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி