பழனியில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பில் சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம் ஆற்றப்பட்டது.
நிகழ்ச்சியின் தலைமை வகித்த மாநில இளைஞரணி துணை செயலாளர் K. ரவி மனோகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் K. மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் S.P. அன்வர்தீன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.E.K. ராஜாமுகமது உள்ளிட்ட பல முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், பேரூர் கழக செயலாளர் G. விஜயசேகரன், ஒன்றிய கழக அவைத் தலைவர் S. சுப்புராம், மாவட்ட மாணவர் அணி தலைவர் M. நவீன்ராஜா, மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலாளர் A. மாரிமுத்து, மற்றும் மாவட்ட ஐடி விங் துணைத் தலைவர் V. குகன் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.
மேலும், ஆயக்குடி பொன் முருகானந்தம், கிளைக் கழக செயலாளர்கள் இரா. ஜெயராமன், காளியப்பன், அய்யாவு அபுதாஹீர், நாகராஜ், அசோக்குமார், I.T. விங் செயலாளர் குமார், கார்த்தி, நகர துணை செயலாளர் சிவசுப்பிரமணி, செல்வம், வெங்கிடாசலம், கோதை, முருகேசன், வடிவேலு, ஒன்றிய கவுன்சிலர் ரவி, காட்டமுத்து, ஆட்டோ காளியப்பன், மணி, கார்த்தி, வசந்த், ஐ.இ.சரவணன், தண்டபானி, மூர்த்தி, நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழா, தந்தை பெரியாரின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளை நினைவுகூரும் வகையில் அமைந்தது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அசோக் குமார்





