பழனி-திண்டுக்கல் சாலையில் ஐடிஓ பள்ளி எதிரே செயல்பட்டு வரும் P.L.A மாருதி கார் ஷோரூமில் நேற்றிரவு மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்து புதிய சிப்ட் கார் ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்றுள்ளனர். இதனால் திருட்டை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் தற்போது கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
தகவலறிந்ததும் ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆதாரங்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





