பழனியில் நகராட்சி வீடட்டோர் தங்கும் இல்லத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, வர்த்தக அணி மாவட்ட தலைவர் ரெடிமேடு பாலகிருஷ்ணன் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையேற்று, மாவட்ட மீனவர் அணி செயலாளர் மகுடீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ கே எஸ் என் வேணுகோபாலு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் நிர்வாகிகளாக நகரத் துணைச் செயலாளர் முருகன், கவுன்சிலர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் குமரேசன், தாராபுரம் பெரியசாமி, தலைமை கழக பேச்சாளர் மாணிக்கம், சரவணன், நாகையா, கோபி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அன்னதானத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மதிய உணவை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பை உயர்த்த பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரின் சமூக சேவைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.





