திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில், பழனி நகராட்சியின் 23வது வார்டில், ஹாஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல் எதிரே புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
நகராட்சி பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அமைக்கப்படும் இந்த புதிய சுகாதார நிலையம், பொதுமக்களுக்கு அடிப்படை சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வேலுமணி, நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.





