பழனி சங்கராலயத்தில், உலக நலன் கருதி, மகா ருத்ர யாகம் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த யாகம் கணபதி ஹோமம், மகா ருத்ர ஹோமம், மகா ருத்ர யாகம் ஆகியவற்றுடன் துவங்கப்பட்டது. இந்நிகழ்வை முருகனடிமை பாலசுப்பிரமணியம் சுவாமிகள் தலைமையில் நடத்தி வருகின்றனர்.
இயக்குநர்கள் எர்ணாகுளம் ஜெயகிருஷ்ணன், மும்பை சுப்பிரமணியம், மும்பை கிருஷ்ணமூர்த்தி, சென்னை கணக்கியல் ஆய்வாளர் கமலபதி, கோவை ஏற்காடு நிறுவனர் ஞானசம்பந்தம், கோவை அக்ஷயா ஹோட்டல் உரிமையாளர் முருகானந்தம், ஆடிட்டர் ஆனந்த சுப்பிரமணியம், சங்கராலயம் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இந்த யாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் சரவண பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் என். பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் அதிபர் ஹரிஹரமுத்து, கட்டிட வல்லுநர் நேரு, அரிமா சுந்தரம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்றனர்.
மகா ருத்ர யாகம் உலக நலனையும், ஆன்மீக ஒற்றுமையையும் உறுதி செய்வதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென சங்கராலயம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





