°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பசுமை மாரத்தான் போட்டி, அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கினார்
Tamil Nadu

தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பசுமை மாரத்தான் போட்டி, அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கினார்

0.0 views
Text Size:

இந்நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சத்திய புவனா ராஜேந்திரன், வாகரை ஊராட்சி முன்னாள் தலைவர் ராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் தண்டபாணி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பசுமை மாரத்தான் போட்டியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த போட்டி ஆண்கள் பிரிவில் 10 கிலோமீட்டர் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் 500 பேர் மற்றும் பெண்கள் பிரிவில் 200 பேர் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு பரிசுகளாக முதல் பரிசாக 10,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 5,000 ரூபாய் மற்றும் மூன்றாவது பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் முதல் 15 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சத்திய புவனா ராஜேந்திரன், வாகரை ஊராட்சி முன்னாள் தலைவர் ராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் தண்டபாணி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், பசுமை மாரத்தான் நிகழ்ச்சியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையினர் வீரர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர், அதை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார். நிகழ்ச்சியில் நம்பிக்கை சிறகுகள் நிர்வாகிகளுக்கு சீல்டுகளும் வழங்கப்பட்டன. இதில் மாநில தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் ஒர்க்ஷாப் பாலு, துணைத்தலைவர் ராஜா, நகர செயலாளர் ஜோதி, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், நாகேந்திரன், கிருஷ்ணன் மற்றும் மகளிர் அணி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பசுமை மாரத்தான் போட்டியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.