பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் முக்கிய பகுதியாக, வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் ‘தினம் ஒரு அலங்காரம்’ நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில், ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வெவ்வேறு அலங்காரங்களை ஏற்பாடு செய்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
இதற்காக கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் உபயதாரராக இருந்து ஆலய அலங்காரத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டார். பக்தர்களின் திரளான வருகையின் இடையே, விஷேஷ பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, அனைவரும் ஆன்மிக திருப்தி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கந்த விலாஸ் அதிபர் என். செல்வகுமார், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், கோவை கற்பகம் பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அலுவலர் கே. முருகைய்யா, வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் எஸ்.டி. மூர்த்தி, நிர்வாக தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எம். எஸ். முகமது அலி, காணியாளர் பன்னாடி ராஜா, நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் கே. சுரேஷ், அரசு தலமை மருத்துவர் உதயகுமார், மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் ஆன்மீக அன்பர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாசி திருவிழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் அம்மனுக்கு புதுப்புது அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு ஆன்மிக அனுபவம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழனி மாரியம்மன் கோவிலின் இத்தகைய விழாக்கள், பக்தர்களுக்கு ஆன்மீக மகிழ்ச்சி அளிப்பதோடு, பக்தி பரவசத்தையும் ஏற்படுத்துகின்றன.





