°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
பழனியில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது
Tamilnadu

பழனியில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது

0.0 views
Text Size:

மேலும், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை நிறைவேற்றவும், சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பணி காலமாக மாற்றவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பழனி, நவம்பர் 25: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திண்டுக்கல் மாவட்ட நூற்றாண்டு விழா மற்றும் மாவட்ட மாநாடு பழனியில் ஜவகர் ரெசிடென்சி மகாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.எஸ். ஜோதி முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத் தலைவர் த.அமிர்த குமார் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர்கள் நாகராஜன், மணிகண்டன், வேல்முருகன், சண்முகவடிவு, மாநில செயலாளர் அருள்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும், மற்றும் 21 மாத 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை நிறைவேற்றவும், சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பணி காலமாக மாற்றவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

பழனி, நவம்பர் 25: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திண்டுக்கல் மாவட்ட நூற்றாண்டு விழா மற்றும் மாவட்ட மாநாடு பழனியில் ஜவகர் ரெசிடென்சி மகாலில் நடைபெற்றது.

பழனியில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது