கள்ளக்குறிச்சி — கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களின் மறுவாழ்வு குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார், கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், பணி நேரம், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், உடற்பரிசோதனை விவரங்கள், பணியிட பாதுகாப்பு, நலவாரிய உறுப்பினர் பதிவு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கு தாமதமின்றி மாத ஊதியம் வழங்கும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதேபோன்று, நல வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்ந்து, அனைத்து அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. கூடுதலாக, துாய்மை பணியாளர்களுக்கு அரசின் அனைத்து சேவைகளும் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் பணியை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், எஸ்.பி. ரஜத்சதுர்வேதி, டி.ஆர்.ஓ. சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். துாய்மை பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து 011-24648924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.





