காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாநகர கழகம் சார்பில் திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா ஆண்டும், திமுக ஆக்க பணிகள் குறித்த பொதுக்கூட்டமும் ஏகேஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்செல்வன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு திமுகவின் சமூக ஆக்கபணிகள் குறித்து சிறப்புரைகள் ஆற்றினர்.
இந்நிகழ்வில் பல பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டு, திமுகவின் சமூக வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஏகேஜி திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா மற்றும் பவள விழா சிறப்பாக நடைபெற்றது. திமுக மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுப்பணிகள் குறித்த ஆலோசனைகள் ஆக்கபூர்வமாக நடந்தன. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மற்றும் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் நாகராஜன்





