°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
உசிலம்பட்டியில் மின் வயர் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு: தொடர்மழை காரணமாக ஏற்பட்ட சோகம்
Tamilnadu

உசிலம்பட்டியில் மின் வயர் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு: தொடர்மழை காரணமாக ஏற்பட்ட சோகம்

0.0 views
Text Size:

சம்பவத்தைத் தகவலறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரின் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு ராமத்தேவர் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்ற முதியவர், கட்டிட தொழிலாளி ஆவார். இன்று காலை, அவர் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்கூடை பின்புறம் இயற்கை உபாதையை கழிக்க சென்றார்.

அப்பகுதியில் இன்று காலை முதலே பெய்து வந்த தொடர் மழையால் மின் வயர் அறுந்து மரக்கிளைகளுக்குள் விழுந்து கிடந்தது. இத்தகவலை அறியாமல், அவ்வழியே சென்ற சுந்தர், மரக்கிளை என நினைத்து மின் வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தைத் தகவலறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரின் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் வந்து அறுந்து கிடந்த மின் வயரை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் எப்போதும் அதிகமாக கூடும் பேருந்து நிலையம் அருகிலேயே ஏற்பட்ட இந்த பரிதாப சம்பவம், உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவலை அறியாமல், அவ்வழியே சென்ற சுந்தர், மரக்கிளை என நினைத்து மின் வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உசிலம்பட்டியில் மின் வயர் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு: தொடர்மழை காரணமாக ஏற்பட்ட சோகம்