தமிழகத்தின் பல பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் விரிவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதிமுக அமைப்பின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு இந்நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் முன்னாள் எம்எல்ஏ க்கள் ஐ. மகேந்திரன், தவசி மற்றும் பல அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதே போல, உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உள்ள வத்தலக்குண்டு சாலையில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பிலும் ஒரே மாதிரியான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், எம்எல்ஏ அய்யப்பன், சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய தீர்ப்பை பரபரப்பாக பகிர்ந்தார். அவர், "உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் ஆலோசனையின் பெயரில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.





