பிரபல பாலிவுட் நடிகை கத்தரினா கைப் -ன் தந்தை ஜெஸி ஜோசப் டிஞ்சரின் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள இ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அவரது பள்ளி வளாகத்தில், பள்ளி நிர்வாகமும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தது.
இலவச மருத்துவ முகாமின் துவக்க நிகழ்வில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. அய்யப்பன் மற்றும் நடிகை கத்தரினா கைப்பின் தாய் மேரி தெரசா சுஸான்னா இணைந்து, மறைந்த ஜெஸி ஜோசப் டிஞ்சரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்எல்ஏ பி. அய்யப்பன் தன்னுடைய மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், சக்கரை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை பெற்றனர். தொட்டப்பநாயக்கணூர், இடையபட்டி, புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம், சடையாண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, இலவச மருத்துவ சேவையை பயன் பெற்றனர்.
இந்த நிகழ்வு, மறைந்த ஜெஸி ஜோசப் டிஞ்சரின் நினைவாக சமூக நலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக அமைந்தது.





