மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும், விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அதற்கான பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டது. விநாயகர் கையில் லட்டு வைத்திருப்பதாக அமைந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு, ஒரிஜினல் லட்டு கரைக்க வரும் முன் சிலையின் மீது வைக்கப்பட்டு, கிராம மக்கள் சார்பில் ஏலமாக விடப்பட்டது.
இந்த ஏலத்தில், கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் என்பவர், அந்த ஒரே ஒரு லட்டை 1,51,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதன் காரணமாக கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்த ஆண்டுகளில் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலமாக விடப்படும் எனவும், அடுத்த ஆண்டு ஏலம் எடுத்தவருக்கு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை மற்றும் 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை மற்றும் ஏலத்தின் தனித்துவமான தன்மையின் காரணமாக, விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு 1,51,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலத்தில் வாங்கிய லட்டான, அதன் பின்னர் பூந்தியாகி அனைவராலும் உண்ணப்பட்டதாக கூறப்படுகிறது, இது கிராம மக்களிடையே நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வீரசேகர் உசிலம்பட்டி மாவட்ட செய்தியாளர்





