மத்திய மாநில அரசுகள் வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 18% GST வரி விதித்ததற்கு தமிழக வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானம் வணிகர்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்று கூறி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜவுளி கடைகள், நகை கடைகள், காய்கறி சந்தை, மொத்த வியாபாரக் கடைகள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட கடைகள் ஒரு நாள் போராட்டமாக மூடப்பட்டன. தேனி சாலை, பேரையூர் சாலை, வத்தலகுண்டு சாலை மற்றும் மதுரை சாலை பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
GST கவுன்சிலில் எந்த மாநில அரசும் இந்த தீர்மானத்தை எதிர்க்காதது வணிகர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்தை நிறுத்தி வாடகை GST விதியை நீக்க வேண்டும் என்று வணிகர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.





