மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் சார்பாக செந்தமிழ்க் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வுக்கு செந்தமிழ் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி தேவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி முன்னிலை வகித்து விழிப்புணர்வு நோக்க உரையாற்றினார்.
விழாவில் திலகர் திடல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் திரு கே. பரமசிவம் மற்றும் கிரைம் பிரான்ச் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் திருமதி சுஜாதா ஆகியோர் போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள், அதன் சமூக மற்றும் குடும்ப விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் பா. நேருஜி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் உதவிப் பேராசிரியர் முனைவர் சா. கணேசன் நன்றி கூறினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு விழிப்புணர்வை பெற்றனர். மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.





