மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பழைய, திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சார பயன்பாடு அதிகரித்து, பாசன நேரமும் நீடிக்கிறது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் பழைய மோட்டார்களை மாற்றி புதிய திறன் கொண்ட மின்மோட்டார்களை வாங்குவதால், பாசன காலங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளைத் தவிர்க்க முடியும். இதனால், மின்சார செலவுகள் குறைந்து, குறைந்த நேரத்தில் பாசன வேலைகளை முடிக்க முடியும்.
மேலும், புதிய மின்மோட்டார்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் பெருமளவில் சேமிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இத்திட்டம் மூலம் புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கான மானியம் வழங்குகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- பழைய, திறன் குறைந்த மின்மோட்டார்களை புதிய, திறன் மிகுந்த மின்மோட்டார்களாக மாற்றும் உதவி.
- நுண்ணுயிர் பாசன திட்டம் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்க உரியவர்கள்.
- விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து விருப்பத்திற்கு ஏற்ப மின்மோட்டார் பம்பு செட்டுகளை வாங்க முடியும்.
- மொத்த விலையின் 50% அல்லது அதிகபட்சம் ரூ.15,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
- விவசாயிகள் இரவு நேரங்களில் பம்பு செட்டுகளை பாதுகாப்பாக இயக்க செல்போன் மூலம் தானியங்கி கருவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த மானிய திட்டம், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன தேவைகளுக்கு திறன் வாய்ந்த உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது, மேலும் அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.





