ஐயப்பனின் அறுபடை வீடுகளில், சபரிமலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது படைவீடாக அறியப்படும் அச்சன் கோவில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில், தமிழக - கேரள எல்லையில், செங்கோட்டை நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
கோவிலுக்குச் செல்வதற்கு, மேக்கரை, மணலாறு, கும்பாவுருட்டி அருவிகளை கடந்து வந்தால் அச்சன் கோவிலுக்கு எளிதாக விரைவில் அடைய முடியும். இந்த கோவில் பரசுராமரால் நிறுவப்பட்ட ஐந்து கோவில்களில் ஒன்று ஆகும்.
அச்சன் கோவில் ஐயப்பனின் இருபுறமும் பூர்ணா மற்றும் புஷ்கலை என்ற இரு தேவியர்களுடன் காட்சி தருகின்றன. இங்கு ஐயப்பனை "கல்யாண சாஸ்தா" என அழைக்கின்றனர்.
இந்த கோவிலின் சிறப்பு, சபரிமலைக்கு அடுத்தபடியாக அதிக நாட்களாக நடைபெறும் உற்சவங்களில் உள்ளது. குறிப்பாக கார்த்திகை, மகரஜோதி, சித்திரை விசு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். மேலும், இந்த மாதத்தில் மாலை நேரங்களில், கோவிலைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
அச்சன் கோவில் பக்தர்களுக்கான வழிபாட்டிற்கான நேரம் காலை 5 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை. இரவு நேரங்களில் தீப ஒளியில் மின்னும் அச்சன் கோவில், தமிழகம் மற்றும் கேரளா முழுவதிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கின்றது.





