°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
வரும் நாட்களில் வானிலை நிலவரம்: வெதர்மேன் அப்டேட் இதோ!
TamilNadu

வரும் நாட்களில் வானிலை நிலவரம்: வெதர்மேன் அப்டேட் இதோ!

0.0 views
Text Size:

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், கயத்தாறு மற்றும் கடம்பூரில் வலுவான மேற்கு திசை காற்று வீசும் என்றும், நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, உவரி, கூடன்குளம் மற்றும் மானூர் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என அவர் குறிப்பிட்டார்.

அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால், கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 கிமீ வேகத்தில்சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், கயத்தாறு மற்றும் கடம்பூரில் வலுவான மேற்கு திசை காற்று வீசும் என்றும், நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, உவரி, கூடன்குளம் மற்றும் மானூர் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என அவர் குறிப்பிட்டார். கேரளாவிலிருந்து வீசும் வலுவான காற்று செங்கோட்டை, கணவாய் வழியாக தென்காசிக்கு நுழைந்து, சுரண்டை, ஊத்துமலை, மானூர், கயத்தாறு, கழுகுமலை, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிகளை அடைந்து அதிக காற்று வேகம் காணப்படும்.

இந்த நிலவரத்தில், அந்த பகுதியில் உள்ள மக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மாலை நேரங்களில் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் சாரல் மழையுடன் மிதமான சூழல் நிலவுகிறது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் மிதமான அளவுதண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. சுற்றுலா பயணிகள் இந்நிலையிலிருந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவிலிருந்து வீசும் வலுவான காற்று செங்கோட்டை, கணவாய் வழியாக தென்காசிக்கு நுழைந்து, சுரண்டை, ஊத்துமலை, மானூர், கயத்தாறு, கழுகுமலை, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிகளை அடைந்து அதிக காற்று வேகம் காணப்படும்.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்: வெதர்மேன் அப்டேட் இதோ!